Description
தொழுகை நம்மைப் படைத்தவனின் மாபெரும் விண்ணுலகக் கொடை. வெறுங்கையுடன் மிஅராஜ் பயணம் சென்ற நமது நாயகம் (ஸல்) நமது இரட்சகனிடம் உரையாடிவிட்டுத் தொழுகையுடன் பூமிக்குத் திரும்பினார்கள். அன்றிலிருந்து நமது இரட்சகனிடம் நாம் உரையாடிக்கொள்ள கிடைத்த ஒரே வானம் தொழுகைதான். ஆனால், நாமோ தொழுகையின்போதும் பூமிப் பந்தை உருட்டிக்கொண்டிருக்கிறோம். உலகில் எத்தனையோ உறவுகள் நமக்கு இருக்கலாம். ஆனால், நாம் ஆதரவற்று தனிமைப்படுத்தப்படவில்லை; நமது இரட்சகனுடன் தொடர்பில் இருக்கிறோம் என்பதைத் தொழுகை உணர்த்துகிறது. இரத்த உறவோ, திருமண உறவோ, நட்பு வட்டமோ அளிக்காத அந்தரங்கப் பிடிமானத்தை, பாதுகாப்பு வளையத்தை, மனநோய்களுக்கு மருந்தை, ஏக்கங்களுக்கு ஆறுதலை, ஷைத்தானிய முடிச்சுகளுக்கு முறியடிப்பை ஒட்டுமொத்த எழுச்சியுடன் அது வழங்குகிறது. இதன் தாக்கம்தான் முஸ்லிம் வாழ்க்கையின் திறந்த புத்தகம். ஆனால், நமது வாழ்க்கைப் பக்கங்கள் தொழுகையால் புரட்டப்படாமல் மனஇச்சைகளால் சிதைந்து படபடத்துக்கொண்டிருக்கிறது. ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்தப் புத்தகத்தில் தொழுகையின் சட்டங்களை விவரிக்கவில்லை. அதன் தாக்கங்களால் வாழ்க்கையை மாற்றும் திட்டங்களை விவரிக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.