About Us
குகை என்ற பெயரில் ஓர் அத்தியாயம் உள்ளது குர்ஆனில். இறைநம்பிக்கை இல்லாமல் மறுமை வாழ்வை வீம்புக்கு மறுத்துக்கொண்டிருந்த அரசன் ஒருவனின் ஆட்சியை எதிர்த்து, நகரத்திலிருந்து தப்பித்து வெளியேறி குகையில் தஞ்சம் அடைந்த இளைஞர்கள் சிலரின் அதிசய வாழ்க்கையை அதில் வாசிக்கிறோம். (விரிவாக அறிய அத்தியாயம் 18) அந்தக் குகைவாசிகள் போல இறைநம்பிக்கையைக் காத்துக்கொள்பவர்களாய் இன்றைய நகரவாசிகளையும் கிராமவாசிகளையும் மாற்றுகிற திட்டமே எங்களின் திட்டம். குகைவாசிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவு என்றாலும், ஒரு தனி சமுதாயம்தான். அவர்களைப் போன்றவர்கள் எங்கிருப்பினும் அவர்களும் நாங்களும் ஒரே சமுதாயம்தான். அப்படிப்பட்டவர்களை உருவாக்க ஒரு முக்கியக் கருவியே நாங்கள் வெளியிடும் புத்தகங்கள்.