மலக்குகள் உலகம்

160.00

நம் மீது இறக்கைகளைப் பரப்பி இறையருளை வேண்டுகிற இனிய நேசர்கள்; ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மஸ்ஜிதின் நுழைவாயிலில் நமக்காகக் காத்திருக்கும் கண்ணியவான்கள்; தொழுகையில் நம்முடன் ஆமீன் சொல்லும் பரிசுத்தவான்கள்; வானங்கள் முழுதும் நிரம்பி இருப்பவர்கள்; வணங்கிய நிலையிலே வாழ்பவர்கள். இப்படிப்பட்ட மலக்குகளின் அழகான உலகத்தைக் குர்ஆன், நபிமொழிகளின் பார்வையில் சுவைபட விவரிக்கிறது இந்நூல். மலக்குகளை நேரில் பார்க்க முடியுமா? பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துசென்றதாகக் கூறுகிறார்களே, அதன் உண்மைநிலை என்ன? மன்மதன் என்ற பெயரில் காதல் தேவதை இருப்பது உண்மையா? ஹாரூத் மாரூத் மலக்குகளா, ஷைத்தான்களா? இது போன்ற பல கேள்விகளுக்கும் விரிவான பதில்களை வழங்குகிறது.

Category:

Description

தேவர்கள், தேவதைகள், அமரர்கள் என்று பல பெயர்களில் பலவிதமான மூடநம்பிக்கைகளைக் கலந்து மலக்குகளை நம்புகிறது உலகம். ஆனால் மலக்குகளின் உண்மையான உலகம் அதிசயமானது; பிரமாண்டமானது; அவர்கள்மீது பிரியம் வைக்க தூண்டுவது. பிரமிப்பூட்டும் அவர்களின் வாழ்க்கையை இவ்வளவு விரிவாகப் பேசுகிற தமிழ் நூல் இதுவே.

Additional information

Weight .29 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மலக்குகள் உலகம்”

Your email address will not be published. Required fields are marked *