Description
அல்லாஹ் இறக்கிய சட்டங்கள்படி ஆட்சி நடத்துமாறு மற்றவர்களுக்குச் சொல்லும் இவர்கள், தங்களை அதில் மறந்துவிடுகிறார்கள். மிகவும் இலேசான காரியம் எது தெரியுமா? அல்லாஹ்வின் ஆட்சியை உங்கள் கொள்கையில், உங்கள் வணக்கத்தில், உங்கள் சுபாவத்தில், உங்கள் சொந்த வீட்டில், உங்கள் குழந்தைகளைப் பண்படுத்துவதில், உங்கள் கொடுக்கல் வாங்கலில் அமல்படுத்துவதுதான். அல்லாஹ் இறக்கிய சட்டப்படி ஆட்சி செய்யாத ஓர் ஆட்சியாளரை அகற்றுவதும் மாற்றுவதும் ரொம்பவே கடினமானது.
ஏன் இவர்கள் இலேசானதை விட்டுவிட்டு, தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ரொம்பக் கடினமானதை அடைய முயன்றுகொண்டிருக்கிறார்கள்? இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, அவர்கள் தர்பியா செய்யப்படாமல் அதில் பெரும் அளவில் குறைபாடும் பாதிப்பும்கொண்டவர்களாக இருப்பது. அல்லது, அவர்களின் கொள்கைக் கோளாறு. அவர்களால் முடியாத ஒன்றின் பக்கம் அவர்களைத் திசைதிருப்பிவிட்டது. இன்று முழுக்கமுழுக்க தஸ்ஃபியா, தர்பியாவுக்காக செயல்படுவதைக் காட்டிலும் நன்மையான ஒன்றை நான் பார்க்கவில்லை.
– இமாமவர்களின் வரிகள் சில.
Reviews
There are no reviews yet.