Description
மறுமை நெருங்கிக்கொண்டே இருக்கின்றது என்பதை இம்மையின் குழப்பங்களும் கேடுகளும் நமக்குத் தொடர்ந்து நிறுவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றையே மறுமையின் அடையாளங்கள் என்கிறோம். நபியவர்கள் முன்னறிவித்த அனைத்தும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குழப்பங்களில் மாபெரும் குழப்பம் தஜ்ஜாலின் வருகையாகும். அவனைக் கொல்ல ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் மறுபடியும் பூமிக்கு இறக்குவான். இது சத்தியம். இதற்கான சான்றுகள் குர்ஆனிலும் நபிமொழியிலும் ஏராளம். ஆனால், இதை மறுப்பவர்களும் சந்தேகிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் திரிபுவாதங்களை முன்வைத்து எதிர்வாதம் செய்கிறார்கள். இதன் விளைவாக தஜ்ஜாலின் பெயரால் எழுகின்ற குழப்பம் அவன் வருவதற்கு முன்பே மிகப் பெரியதாக நமக்குத் தெரிகின்றது. ‘உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து அவனது குழப்பதைவிட மாபெரும் குழப்பம் வேறில்லை’ என்ற நபிமொழியின் எச்சரிக்கை இப்போதும் நினைவுக்கு வருகின்றது. அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் இவ்விசயத்தில் தெளிவான கொள்கையில் இருந்தார்கள். இமாம் அல்அல்பானீ (ரஹ்) இந்நூலில் அதற்கான நபிமொழிச் சான்றுகளைத் தொகுத்தளித்து ஓர் ஆய்வேடாக இதனை வழங்கியுள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.