Description
முஸ்லிம் சமூகம் ஒரே சமூகமாகும். இஸ்லாம் அதற்கான உறுதியான, தெளிவான அடிப்படைகளை நிறுவியுள்ளது. அல்லாஹ் தன் அடியார்களுக்கு நேர்வழி எனும் ஒரே வழியை வழங்கி அனைவரையும் அந்த ஒரு வழியின்மீது நிலைத்திருக்கும்படி கட்டளையிடுகிறான். இந்த வலியுறுத்தலின் மூலம் நேர்வழிதான் ஒரே சமூகமாக நாம் ஒற்றுமைப்பட்டு வலிமை பெறுவதற்கான வழி என்று உணர்த்தியிருக்கிறான். எனினும், வழிதவறிய சிந்தனைகள் நம்மைப் பிளவுபடுத்துகின்றன. இந்தச் சூழலில் நம்மைக் காத்துக்கொள்ள எழுதப்பட்டதுதான் ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அத்தமீமீ (ரஹ்) அவர்களின் ஆறு அடிப்படைகள். குர்ஆனும் நபிவழியும் முன்வைக்கின்ற இந்த அடிப்படைகளுக்கு மிகுந்த பயனுள்ள விரிவுரையை ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் எழுதி வழங்கியுள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.