Description
சமாதியை வழிபடுவோர் என்று இங்குக் குற்றம் சாட்டப்படும் மக்கள், ‘நாங்கள் எங்கே சமாதியில் உள்ளவர்களை வழிபடுகிறோம்? அவர்களை என்ன அல்லாஹ் என்றா சொல்லுகிறோம்? அவர்களிடம் பரிந்துரைதானே கேட்கிறோம்? எங்களுக்கு வேண்டியதை அந்த இறைநேசர்கள் அல்லாஹ்விடம் பெற்றுத்தருவார்கள் என உதவிதானே கேட்கிறோம்?’ என்பார்கள். சிக்கல் எங்கே எனில், தாங்கள் புனிதப்படுத்தும் இறந்தவர்களை உயிருள்ள மனிதர்களின் நிலையிலோ, அல்லது அதைவிட பிரத்தியேக சக்தி பெற்றவர்களின் தன்மையிலோ இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதுதான். இதன் விளைவாக அவர்களிடம் பிரார்த்தனை செய்வதையோ, உதவி கோருவதையோ, அபயம் தேடுவதையோ, ஏன் அவர்களின் சமாதிகள் முன்பு சிரம் தாழ்த்திப் பணிவதையோ, அஞ்சுவதையோ வணக்க வழிபாடு என்றே புரியாமல் இணைவைக்கிறார்கள். ஆனால், இதே செயல்களை அல்லாஹ்வுக்குச் செய்யும்போது, அவற்றை வணக்க வழிபாடுகள் என்றே நம்புகிறார்கள். இதனுடைய விளைவு, அல்லாஹ்வுக்குச் செய்கின்ற வணக்கத்தின் நன்மைகளும் உயிரற்ற எலும்புக்கூடாகிப் பயனற்றப் போகின்றன. அதேசமயம், இறந்தவர்களுக்குச் செய்கின்ற வணக்கங்களை ஷைத்தான் ஒரு பொற்கிழி முடிப்பு போல அல்லாஹ்வின் நெருக்கம் கிட்டுகின்ற வெகுமதியாகக் காட்டி அவர்களின் நம்பிக்கைகளைப் புனிதப்படுத்துகிறான். ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது இந்நூலில் இந்த வழிபாட்டைச் சுற்றி எழும் அய்யங்களுக்குத் தெளிவான பதில்களை ஆதாரங்களுடன் தொகுத்தளித்து ஏகத்துவ வழிபாட்டின் பொருளை நிலைநிறுத்துகிறார்.
Reviews
There are no reviews yet.