Description
ஒவ்வோர் ஆண்டும் றமளான் உற்சாகமாக வருகிறது. ஆனால், நம்முடைய ஈமானை உற்சாகப்படுத்திக்கொள்ள நாம் தயார் இல்லை. கஞ்சிக் கோப்பையும், வடை சமோசாக்களும் நம்முடைய றமளானில் முக்கிய இடம்பெறுகின்றன. நல்லது. சூடாகச் சாப்பிடலாம். குற்றமில்லை. ஆனால் எந்தளவு அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துகிறோம் என்பதை யோசிக்க வேண்டுமல்லவா? எல்லா ரெசிப்பிகளும் நமக்கு அத்துப்படி. நல்லது. ஆனால் அல்லாஹ்வை நெருங்குவதற்கு அவை தடையாகக் கூடாதல்லவா? உண்ட மயக்கத்தில் குறட்டை விட்டு, அரிய வாய்ப்பை நழுவ விடுவது எந்தவிதத்தில் புத்திசாலித்தனம்?
Reviews
There are no reviews yet.