Description
அறியாமைக் காலத்தின் அப்பட்டமான கொள்கைகளை, வழக்கங்களை ஆணித்தரமான ஆதாரங்களுடன் பட்டியல் தருகின்ற பெருமதியான புத்தகம் இது. நபியவர்களின் சமூகச் சீர்திருத்தம் எதையெல்லாம் எதிர்த்து நடைபோட்டது என்பதை மிக எளிதாக இங்குத் தெரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்த வழிகேடுகளும் உச்சத்தில் இருந்த ஒரு காலத்தில் அவை அனைத்தையும் எதிர்த்து களம் காண்கிறார் அல்லாஹ்வின் தூதர். இதை ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தில் இந்தப் புத்தகம் முன்வைக்கின்றது. ஆம், எல்லா வழிகேடுகளுமே ஏகத்துவத்திற்கு எதிரானவை என்கிற ஒற்றைப் புள்ளியில் இது நிறுத்திப் பேசுகிறது. அதாவது, இஸ்லாமின் உயிர்நாடியான ஏகத்துவமும் அறியாமைக் கால மூட வழக்கங்களும் எக்காலத்திலும் ஒன்றிணைய முடியாதவை. ஏகத்துவம் அல்லாஹ்வின் கொடை; அவனுடைய அறிவின் மேன்மை. மூடவழக்கங்களோ மனிதர்களின் கேடுகள்; அவர்களுடைய அறிவின் கீழ்மை. இஸ்லாம் மறுமையின் காலம் வருகின்ற வரை எல்லா அறியாமைக் காலங்களுக்கும் எதிராக நின்று நேர்வழியைக் காட்டுகின்றது. இணைவைப்பும் இறைநிராகரிப்பும் எந்த வடிவத்தில் வந்தாலும் அனைத்தையும் அடையாளம் காட்டி அறியாமையில் இருக்கின்ற மக்களைக் காத்து நிற்கின்றது. அதற்கொரு கையேடு போன்ற வழிகாட்டிதான் இந்தப் புத்தகம்.
Reviews
There are no reviews yet.