கஷ்ஃபுஷ் ஷுபுஹாத் – தவ்ஹீதைக் குறித்த சந்தேகங்களை அகற்றுதல்

180.00

Description

முஸ்லிமின் ஏகத்துவக் கொள்கைதான் ஷைத்தானுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நாம் நரகத்திற்குப் போக வேண்டும் என்று அவன் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க, ஏகத்துவமோ நம்மைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவிட இறக்கப்பட்ட கொள்கையாகும். இது அவனது இலட்சியத்தைத் தோல்வியுறச் செய்வதால், அவன் எதையாவது செய்து நமது கொள்கையில் குழப்பத்தை ஏற்படுத்த துடிக்கிறான். நம்மை வீழ்த்த அவன் எடுக்கும் ஆயுதமே சந்தேகங்கள். நமக்குள் ஏகத்துவம் பற்றிய குழப்பங்களையும் சந்தேகங்களையும் தூண்டிவிட்டு அதனூடாக வழிகெடுப்பதற்கு அவன் திட்டமிடுகிறான். உள்ளத்தில் பலவிதமான, தவறான சந்தேகங்களை எழுப்பி நம்மைத் தடுமாறச் செய்கிறான். தவ்ஹீதை ஷிர்க்காகவும் ஷிர்க்கைத் தவ்ஹீதாகவும் மாற்றிக் காட்டுகிறான். இச்சமயத்தில் நாம் குர்ஆன் நபிவழி வெளிச்சத்தில் நடைபோட்டால் ஷைத்தான் ஊதும் சந்தேகங்களைவிட்டு நமது ஏகத்துவக் கொள்கையைக் காத்துக்கொள்ளலாம். முஸ்லிம்கள் இன்று மிகப் பெரிய அளவில் குழம்பியிருப்பது இறைநேசர்கள் விசயத்தில்தான். இதில் வரம்புமீறி இணைவைப்பில் விழுந்திருப்போர் பலரும் ஏகத்துவக் கொள்கை குறித்த தெளிவில்லாமல்தான் இருக்கிறார்கள். பல சந்தேகங்களில் உழல்கிறார்கள். இவ்விசயத்தில் அவர்களின் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அரிய புத்தகம் இது.

Additional information

Weight 200 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கஷ்ஃபுஷ் ஷுபுஹாத் – தவ்ஹீதைக் குறித்த சந்தேகங்களை அகற்றுதல்”

Your email address will not be published. Required fields are marked *