Description
மதீனா ஒரு காலத்தில் யஸ்ரிப் எனப்பட்டது. நபியவர்கள் அந்த நகரில் நுழைந்ததும் வாழ்ந்ததும் மரணித்ததும் அது நபியவர்களின் நகரம் ஆனது. மதீனா என்றால் நகரம். அதுவே பெயரானது. வெறும் பெயராக மட்டும் இல்லை; அதற்கென்று சிறப்புகளும் சிறப்புப் பெயர்களும் வந்துவிட்டன. அது சிறப்பான மக்களின் நகரமாகிவிட்டது. அங்கிருந்துதான் முழு உலகுக்கும் இஸ்லாம் பரவத் தொடங்கியது. அங்கிருந்தே நபியவர்கள் ரோம, பாரசீக மன்னர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். அங்கிருந்தே அந்த மன்னர்களை எதிர்த்து படைகள் கிளம்பின. இப்படிச் சொல்லிக்கொண்டே போகும் அனைத்து நடவடிக்கைகளுமே மஸ்ஜிதுந் நபவீயை மையமாக வைத்துதான் நடந்தன. இது நபியவர்கள் கட்டிய மஸ்ஜிது; அவர்களும் தோழர்களும் தொழுத, வஹ்யி இறங்கிய, வழிகாட்டல்களைப் பெற்றுக்கொண்ட மஸ்ஜிது. அல்லாஹ் அங்குத் தொழுவோருக்கு ஆயிரம் மடங்கு நன்மைகளை அளிக்கிறான். இதுபோல் இன்னும் பல விசயங்களை நாம் அறிய வேண்டியுள்ளது. இதற்குச் சரியான கல்வியைக் கற்றுத்தரும் நல்லதோர் அறிமுகப் புத்தகம்தான் இது.
Reviews
There are no reviews yet.