Description
முஸ்லிம் பெண் மட்டுமல்ல, எந்தப் பெண்ணும் பெண்தானே? அந்நிய ஆண்களிடம் அவளின் அழகை அவள் மறைக்கும் வரை அவள் பாதுகாப்பாக இருக்கிறாள். கண்ணியமாக நடத்தப்படுகிறாள். இல்லையெனில், ஏதேனும் ஒரு வடிவில் ஷைத்தான்கள் அவளுக்குத் தீங்கு செய்கிறார்கள். குறிப்பாக, இணையமும் சமூக ஊடகமும் ஒவ்வொருவர் கையிலும் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள இக்காலத்தில் அவளை உளவியல் ரீதியாகத் துன்புறுத்த பல தீய சக்திகள் காத்திருக்கின்றன. இதையே தொழிலாகச் செய்பவர்கள் தினம்தினம் அதிகரித்து வருகிறார்கள். இஸ்லாம், பெண்ணை எல்லாவிதத்திலும் பாதுகாக்கின்ற சமயம்; அல்லாஹ்வின் வழிகாட்டல் நெறி. இங்கு பெண்ணின் முகமும் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில், அந்நிய ஆணை முதலில் ரசிக்கத் தூண்டுவது அவளின் முகம்தான். முகத்தை முகம் என்று மட்டும் நினைத்துவிட முடியாது. உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி. உள்ளத்தின் பாவனைகள் வெளிப்படும் முக்கிய இடம். அந்நிய ஆணின் உள்ளத்தை ஈர்க்கின்ற முகம், ஒரு வகையில் அந்தப் பெண்ணின் உள்ளத்தைப் படிக்கின்றது எனப் பொருள். ஆணுக்கு இப்படி ஒரு வழியைத் திறக்கின்ற முகம், ஒரு வகையில் பெண்ணுக்குத் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது என்பதே எதார்த்தம். முகத்தை மூடிவிட்டால் பெரும்பாலான குழப்பங்களின் பாதையும் மூடப்பட்டுவிடும். எனினும், முஸ்லிம் அறிஞர்கள் சிலரிடம் ‘முகம் மறைத்தல் கட்டாயமல்ல’ என்ற கருத்தும் இருக்கின்றது. இதுகுறித்து மிகத் தெளிவான பதிலை முன்வைக்கின்ற நூலே இது.
Reviews
There are no reviews yet.