Description
ஹிஸ்புத் தஹ்ரீர் பெயரைப் பொதுமக்கள் கேள்விப்படுவது குறைவுதான். ஏனெனில், தங்கள் கட்சியின் பெயரை ஓரளவு இரகசியமாக வைத்திருப்பது அவர்களின் வழக்கம். சிந்தனையைத்தான் முதலில் பரப்புவார்கள். அதில் ஈர்க்கப்பட்டவர்களுக்குத் தனிப் பாடங்களைப் பின்னர் நடத்துவார்கள். பெயரில் ஒன்றுமில்லை. அதை மறைப்பதாலும் ஒன்றுமில்லை. சிந்தனைதான் சிக்கலானது. அதனால் பெயரும் அதை மறைப்பதும் விவகாரமாக ஆகிவிடுகிறது. வேறு பெயர்களில் வந்தாலும், சிந்தனை என்னவோ அதேதான் என்பதால் சிக்கல் சிக்கல்தான். ‘கிலாஃபத் சிந்தனை’ என்ற பெயரில் வலம்வரும் கொள்கைகள் விசாரணைக்குரியவை; ஆய்வுக்குரியவை. ஒரு சிந்தனையிடம் போய் தனியாகப் பேச முடியாது. அதற்குரியவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறவர்களிடம்தான் பேச முடியும். எனவே, ஹிஸ்புத் தஹ்ரீரிடம் பேசுகிறோம்; அவர்களின் போக்குகளில் சில விசயங்களில் விலகி நின்றாலும், அடிப்படையில் அவர்களைப் போன்றே இயங்குகிறவர்களிடம் பேசுகிறோம். ‘கட்சியால் நீங்கள் பிரிந்திருந்தாலும், செயல்பாடுகளால் ஒருவரை ஒருவர் மிகைக்கப் பார்க்கிறீர்கள். அது பல வகையில் நபிவழிக்கு முரணாகவும் உம்மத்திற்குச் சோதனையாகவும் சீர்திருத்தப் பாதையில் குழப்பமாகவும் இருப்பதால் உங்கள் எல்லோரிடமும் நாம் உரையாட விரும்புகிறோம்.’ இஸ்லாம் மேலோங்கத்தானே நாம் இயங்குகிறோம்? சரி, நமக்கான தீர்ப்பை, வழிமுறையை அதன் மூலாதாரங்களிலிருந்தும் அதைச் சரியாகப் புரிந்து பின்பற்றிய முதல் தலைமுறை ஜமாஅத்திடமிருந்தும் எடுத்துக்கொள்வோம். நாம் உருவாக்கியுள்ள ஜமாஅத், கட்சி, இயக்கம் என எதுவாக இருப்பினும், அதை அந்த முதல் தலைமுறையின் பாதையில் அமைப்போம். இஸ்லாம் மேலோங்கும்.
Reviews
There are no reviews yet.