Description
இந்த விநாடியில் இப்போது முஸ்லிமானவர் என்றாலும், அல்லது இஸ்லாமிய உலகின் பிரபல மேதை என்றாலும், அனைவருக்குமே முக்கியமானவை சில எப்போதும் உண்டு. சொர்க்கத்தில் படித்தரங்கள் இருப்பதால், அவரவரின் தகுதிக்கேற்ப நுழைவோம். ஆனால், சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவாக முக்கியம்தானே? அந்த அடிப்படையில் திருக்குர்ஆனில் நாம் முதலில் மனனம் செய்து புரிந்திருக்க வேண்டிய சின்ன அத்தியாயங்களின் பட்டியல், அவற்றின் சுருக்கமான விளக்கம், இஸ்லாம் ஈமான் இஹ்ஸான் முதலியவற்றின் அடிப்படைகள், ஏகத்துவத்திற்கும் இணைவைப்புக்கும் இடையிலான வேறுபாடுகள், வுளூ தொழுகை சட்டங்கள், நற்குணங்களைத் தூண்டுதல், பாவங்களை எச்சரித்தல், இறப்பின் இறுதிச் சடங்குகள் போன்றவற்றை ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) இந்நூலில் கவனப்படுத்துகிறார்கள். சிறுவர், பெரியோர், ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி அனைவருக்குமான கடமையான கல்வியை இந்த நூலில் விளக்கக்குறிப்புகளுடன் அறிந்துகொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.