இந்த விநாடியில் இப்போது முஸ்லிமானவர் என்றாலும், அல்லது இஸ்லாமிய உலகின் பிரபல மேதை என்றாலும், அனைவருக்குமே முக்கியமானவை சில எப்போதும் உண்டு. சொர்க்கத்தில் படித்தரங்கள் இருப்பதால், அவரவரின் தகுதிக்கேற்ப நுழைவோம். ஆனால், சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவாக முக்கியம்தானே? அந்த அடிப்படையில் திருக்குர்ஆனில் நாம் முதலில் மனனம் செய்து புரிந்திருக்க வேண்டிய சின்ன அத்தியாயங்களின் பட்டியல், அவற்றின் சுருக்கமான விளக்கம், இஸ்லாம் ஈமான் இஹ்ஸான் முதலியவற்றின் அடிப்படைகள், ஏகத்துவத்திற்கும் இணைவைப்புக்கும் இடையிலான வேறுபாடுகள், வுளூ தொழுகை சட்டங்கள், நற்குணங்களைத் தூண்டுதல், பாவங்களை எச்சரித்தல், இறப்பின் இறுதிச் சடங்குகள் போன்றவற்றை ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) இந்நூலில் கவனப்படுத்துகிறார்கள். சிறுவர், பெரியோர், ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி அனைவருக்குமான கடமையான கல்வியை இந்த நூலில் விளக்கக்குறிப்புகளுடன் அறிந்துகொள்ளலாம்.
Sale!
அடிப்படைக் கல்வி
முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்
₹99.00
தினசரி வாழ்வில் ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய வணக்கவழிபாடுகள் எவை, அவற்றின் வழிமுறைகள் என்னென்ன என்பவற்றை ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறியக்கூடிய முறையில் சிறுசிறு பாடங்களாக முன்வைக்கும் நூல்.
Reviews
There are no reviews yet.