அஸ்ஸுஹ்த் – உலக மோகம் இல்லாமை

240.00

SKU: KV088 Category:

Description

இந்த உலகம் எவ்வளவுதான் அழகோடும் வண்ணங்களோடும் பூத்துக் குலுங்கினாலும் அழிவு என்பது தவிர்க்க முடியாத தன்மை. அழகும் அழிவும் சேர்ந்தே இருக்கின்றது. இன்பமளிக்கும் எதுவாக இருந்தாலும் அதன் மறுபக்கம் அழிவுதான் என்பது இவ்வுலகின் நியதி. மறுமையின் இன்பமோ என்றும் அழியாதது. இதை உணர்ந்தவர்கள் உலக அறிவில் பெரிய மேதைகள். அவர்களை இந்த உலகமும் உலகிலுள்ள யாரும் ஏமாற்ற முடியாது. பணம், பதவி, புகழ், பெண் என்று எதையாவது காட்டி அவர்களை விலைக்கு வாங்கிவிட முடியாது. எதன் பின்னாடியும் அவர்கள் ஓடிக்கொண்டிருக்க மாட்டார்கள். எதனுடைய இழப்பும் அவர்களை ஒடித்து உட்காரவைத்துவிட முடியாது. ஏனென்றால், அவர்களின் இலக்கெல்லாம் மறுமை வாழ்க்கையின்மீதே இருக்கும். அதற்காகத்தான் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடி என்னவெல்லாம் இங்குச் செய்ய முடியுமோ, அதையே தங்கள் உலகமாக ஆக்கியிருப்பார்கள். இது அவர்களது ஏழ்மையின் நிர்ப்பந்தம் என்று நினைத்துவிடக் கூடாது. உலக இன்பங்கள் அவர்களின் காலடியில் வந்துசேரும்போதுகூட அவர்களது மனம் அவற்றிடம் ஒட்டாது. தர்மங்களாலும் நல்லறங்களாலும் அவற்றைவிட்டுத் தூரமாகிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அவை அவர்களிடம் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நிலையில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று இவ்வுலகைவிட்டுப் போய்விடுவார்கள்.

Additional information

Weight 265 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “அஸ்ஸுஹ்த் – உலக மோகம் இல்லாமை”

Your email address will not be published. Required fields are marked *