ஹிஜாப் என்றால் திரை எனப் பொருள். அழகுக்கும் அலங்காரத்திற்கும் முஸ்லிம் பெண் திரையிட்டு மறைத்த நிலையில்தான் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும். யாரிடம் தன் அழகை மறைக்கிறார்? எதற்காக மறைக்கிறார்? அந்நிய ஆண்களின் இச்சைக் கண்களைவிட்டு மறைக்கிறார். தன் கண்ணியத்தைக் கட்டிக்காக்க மறைக்கிறார். தன்னைக் காக்க மறைக்கிறார். எல்லாக் காலத்திற்குமான முற்போக்குப் பெண்ணியச் சிந்தனையை எப்போதோ நபிகளார் வழிகாட்டிச் சென்றுவிட்டார்கள். இது உண்மையில் இறைவனின் வழிகாட்டல். ஆணையும் பெண்ணையும் படைத்தவனின் ராஜ கட்டளை. அவனுக்குக் கீழ்ப்படிவதால் ஆணும் பெண்ணுமே நன்மை அடைவார்கள். அரைகுறை ஆடையோடு கோமாளிப் பெண்ணியம் பேசுவோர் அறிவில் முதிர்ச்சி அடையாமல் பெண்ணினத்தையே கோமாளியாக்கி பேராபத்தில் தள்ளிவருகிறார்கள். பெண்ணைப் பெண்ணாகப் பாவிக்காததைவிடப் பெரிய துரோகமும் சூழ்ச்சியும் துர்புத்தியும் எது பெண்ணே?
Sale!
ஃபிக்ஹ் சட்டங்கள், மகளிர் கல்வி
ஹிஜாப் எதற்காக
₹81.00
முஸ்லிம் பெண்ணின் அழகையும் அலங்காரத்தையும் மறைக்கின்ற மேலங்கியை ஹிஜாப், புர்கா, பர்தா என்பார்கள். இது எதற்காக? இது எப்படி இருக்க வேண்டும்? இதன் நன்மைகள் என்ன? பெண்ணழகை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்துவதால் விளைகின்ற தீமைகள் என்ன? பதில் தருகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.