இஸ்லாமிய அறிவுத்தேடலின் அடிப்படைகள் – விரிவாக்கப்பட்ட பதிப்பு

120.00

இஸ்லாமியக் கல்வியை எப்படித் தேடிக்கொள்ள வேண்டும்? யாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்? அதற்கான அடிப்படை விதிகள் என்னென்ன? இஸ்லாமியக் கல்வி என்றால் என்ன என்பதையெல்லாம் விளக்கும் நூல்

Description

மார்க்கக்கல்வியைத் தேடும் மாணவர், தாம் எதைக் கற்றிருப்பது கட்டாயமோ அதைக் கற்றுக்கொள்ளவே முன்னுரிமை தரவேண்டும். விரும்பத்தக்கது என்ற வகையிலான (முஸ்தஹப்பு) கல்வியைக் காட்டிலும் கட்டாயமான கல்விக்கே முன்னுரிமை தரவேண்டும். இதை விட்டுவிட்டு அவருக்கு விரும்பத்தக்கது என்ற வகையிலான கல்வியையே அவர் கற்றுக்கொண்டிருந்தால், இதுவும் கல்வியைத் தேடுவதில் அவர் எதிர்கொள்ளும் தடைக்கற்களில் உள்ளதாகும். உதாரணத்திற்கு, நீங்கள் பார்த்திருக்கலாம். ஒருவர் மொழியில் வல்லுநராகி, நுணுக்கமான இலக்கணச் சட்டங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும், சொல் நயங்களையும், விதிகளையும் பேசுவார். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ^ வுளூ செய்த முறைப்படி சரியாக வுளூ செய்யவும் தெரியாதவராக இருப்பார். அல்லாஹ்வின் தூதர் எப்படித் தொழுதார்களோ, அதே முறைப்படித் தொழுகத் தெரியாதவராக இருப்பார். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

– ஷெய்க் பாஸ்மூலின் வரிகள் சில.