தூய மனம்

140.00

உள்ளம் தூய்மையான நிலையில் வாழ்க்கையை இறைவனுக்காக அமைத்துக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் பொறாமை, ஆணவம், பேராசை, உலக ஆதாயத்தை மட்டுமே நோக்கமாக வைத்தல், முகஸ்துதிக்காக வழிபாடு செய்தல் போன்ற தீய நோக்கங்களை அனுமதிக்கக் கூடாது என்பதைச் சொல்லித் தரும் நூல்.

SKU: KV025 Category:

Description

ஒவ்வொரு சொல் செயலுக்குப் பின்னே அதன் உந்துசக்தியாக மனம் இயங்குகிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். உண்மையில் தூய மனம் இருந்தால்தான் மார்க்கம் உண்டு. இஸ்லாம் தூய்மையின் மார்க்கம். அகத்தூய்மையால் அதன் சக்தி பரவுகின்றது. சொல் செயலின் புறத்தூய்மைக்கு அது வெளிச்சம் அளிக்கின்றது. செயற்கரிய காரியங்கள் அந்தத் தூய சக்தியின் பரவலில் நம்மையும் உலகையுமே மாற்றிவிடுகின்றன. அல்லாஹ்வின் திருப்திக்காக எந்த விளைவிலும் மனம் திருப்தி கொள்கின்றது. எல்லாம் சுபமே என்பது சொர்க்கம் வரை தொடர்கின்றது.

இந்தப் புத்தகத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மனம் உலுக்கப்படுகிறது. நமது தூய மனம்தான் நாம் எல்லாக் கணத்திலும் தொலைத்துக் கொண்டிருக்கும் இதயத்துடிப்பு என்று உருகிப்போகிறோம். மனத்தைப் பறிகொடுப்பது அல்ல, தூய மனத்தைப் பறிகொடுப்பதுதான் நமது வாழ்க்கையை, உயிரை, அர்ப்பணிப்பை, சுவர்க்கத்தை, இறை அன்பைப் பறிகொடுக்கின்ற அவலம். ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்நூலின் மூலம் நமது மனத்தோணியைத் தூய தண்ணீர் வெளியில் கட்டிப்போட்டு வானை நோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார். தூய மனம் – தேவை இக்கணம்.