Description
காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரைப் பின்பற்றும் நாத்திகர் கொள்கையும் இஸ்லாமிய அடிப்படைக்கு முரணானதே. இவர்கள்தாம் இன்று நாத்திகம் பேசி மக்களை இறைநிராகரிப்பின் பக்கம் அழைப்பவர்கள். சோசலிசம், கம்யூனிசம், பாஃதிசம் என்று இவர்களின் கொள்கைகளுக்கு எந்தப் பெயர் சொன்னாலும், அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்த கொள்கைக்கு அவை எதிரானதே.
அல்லாஹ் இல்லை, இவ்வுலக வாழ்வே சதம் என்பதுதான் நாத்திகர்களின் அடிப்படை. இவர்களது மற்றோர் அடிப்படை, மறுமைவாழ்வையும் சொர்க்கம், நரகத்தையும் மறுத்து, எல்லா மதங்களையும் நிராகரிக்க வேண்டும் என்பது. இவர்களின் புத்தகங்களிலும் சொற்பொழிவுகளிலும் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
அல்லாஹ் கொடுத்த மார்க்கங்கள் அனைத்திற்கும் முரண்பட்டதே இவர்கள் கொள்கை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோர் இம்மையிலும் மறுமையிலும் இழிவையே சந்திப்பர் என்பதிலும் சந்தேகம் இல்லை.
– இமாமவர்களின் வரிகள் சில
Reviews
There are no reviews yet.