முக்தஸர் அஷ்ஷமாஇலுல் முஹம்மதிய்யா – முஹம்மது (ஸல்) தோற்றமும் தன்மைகளும்

300.00

Description

நபியவர்களுடன் பேசிப் பழகி அவர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்கூடாக அனுபவித்த மனிதர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. நபித்தோழர்கள் மட்டுமே இதில் பெரும் பேறு பெற்றவர்கள். ஆனாலும், நமக்கும் இந்த உலகில் இதில் கொஞ்சம் ஆறுதல் பெறுவதற்கு ஒரே ஒரு வழி இருக்கின்றது. அதுதான் நபியவர்களை வருணித்துள்ள தோழர்களின் அறிவிப்புகளை வாசிப்பதாகும். நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் வழியாக நாமே நபியவர்களை நேரில் காண்கிறோம். அவ்வளவு துல்லியமாக அவர்களின் நரைமுடிகளின் எண்ணிக்கை உட்பட, நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் தெரிந்துகொள்கிறோம். வரலாறு என்பதின் செவ்வியல் (Classic) வடிவத்தை இங்குதான் பார்க்க முடியும். சின்னச் சின்ன விவரங்களும் பதிவாகியுள்ளன. அவையும் கற்பனையில் எழுதப்பட்டவை அல்ல. ஆதாரங்களுடன் உறுதிசெய்யப்பட்டவை. கண்விழித்தது முதல் கண்மூடும் வரை, உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொன்றும் வருணிக்கப்பட்டுள்ளது. நபியவர்களின் அங்க அடையாளங்கள், குணாதிசயங்கள், அன்றாட வாழ்வியல் பற்றிய இத்தொகுப்பு உலகில் எந்த மனிதருக்கும் இல்லாத வரலாற்று அற்புதமாகும்.