Description
ஆயிஷா எனும் பெயர் இஸ்லாமிய வரலாற்றில் தனித்துவமானது. இப்பெயரைக் கேட்டவுடன் ‘இவர் என் தாய்’ எனும் உணர்வு வருகின்ற அதே சமயம், ‘அவர்களின் ஆளுமையே ஆளுமை; அறிவே அறிவு’ என்ற ஆச்சரியமும் சேர்ந்துகொள்ளும். முஃமின்களின் அன்னையர் ஆன நபியவர்களின் மனைவியர் அனைவரும் நமக்குள் தாய்ப் பாசத்தின் தகுதி உயர்வு கொண்டவர்கள் என்றாலும், ஆயிஷா (ரலி) மட்டும் தனித்துவமாக நமது நேசத்தை அள்ளிக்கொள்கிறார்கள். நபியவர்களே அவ்வளவு நேசித்தார்கள் என்றால், நாம் நேசிக்காதிருப்போமா? அன்னையவர்களைப் பற்றி நாம் கேள்விப்படும் அனைத்துமே தனித்துவமானவை. அவர்களின் திருமணம், விளையாட்டுத்தனம், நபியவர்களுடனான உரையாடல், குடும்ப வாழ்க்கை, பயணம், நபித்தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் மார்க்கச் சந்தேகங்களை நிவர்த்தி செய்த ஞானம் என எதுவாக இருந்தாலும் அவர்களிடம் தனித்துவம் இருக்கும். நபியவர்களுக்கு அவர்களை மிகவும் பிடித்துப்போனதற்கு அவர்களின் முழு வாழ்வையுமே காரணமாகச் சொல்லிவிடலாம். அவர்கள் வழியாக இந்த உம்மத்தின் பெண்கள் மட்டுமல்ல, ஒவ்வோர் ஆணும்கூட பயனடைய முடியும். அன்னையவர்களின் ஈமான் ஒரு முஸ்லிம் எப்படித் தன் இரட்சகனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது. அவதூறு சம்பவம் அதற்கோர் ஆதாரம். இப்படி ஒவ்வொன்றாகத் தொகுத்தால் அது பெரும் தொகுதியாக அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் போல மாறும். இந்நூலில் சுருக்கமாக 40 தனித்துவங்களை ஷெய்க் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நமது தாயைப் பின்பற்றுவோமாக.
Reviews
There are no reviews yet.