Description
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவருமே அவனுடைய பாதையின் பக்கம் மற்றவர்களை அழைப்பதில் உண்மையான மகிழ்ச்சியை அடைவார்கள். ஏன்? அது அல்லாஹ்வின்மீதான நேசத்தின் வெளிப்பாடு; அவனை மட்டுமே வணங்குவதுதான் சத்தியக் கொள்கை என்று உளப்பூர்வமாக நம்பிவிட்ட மகிழ்ச்சியின் செயல்பாடு. எனவே, எல்லோரும் இதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும், இதன் மகத்தான நன்மைகள் தனக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் அழைப்புப்பணியில் ஈடுபட வேண்டும். இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்குமானது. இதை ஒரு முஸ்லிம் பிற மனிதர்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லும்போதுதான் முஸ்லிம்கள் என்பவர்கள் உலக மக்கள் அனைவருக்குமானவர்கள் என்பது நிறுவப்படுகிறது. இது அல்லாஹ்வின்பக்கம் மக்களை அழைப்பதால் மட்டுமே நடக்கும். அதே சமயம், எப்படி வேண்டுமானாலும் இப்பணியைச் செய்யலாம் என்பதல்ல. இதற்கு ஒழுக்கங்களும் வழிமுறைகளும் இருக்கின்றன. முதலில் மனத்தூய்மை முக்கியம். அல்லாஹ்வின் முகத்தை நாடியே செய்ய வேண்டும். அடுத்து, நபிவழியைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, பொறுமை மிகவும் முக்கியம். அதுதான் இந்தச் செயல்பாட்டின் உயிர்நாடி. ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் இந்நூலில் அழைப்புப்பணியின் தன்மைகளையும் அடிப்படைகளையும் எளிமையாக விவரிக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறியவேண்டியவை இவை.
Reviews
There are no reviews yet.