Description
ஸலஃபின் மன்ஹஜ் என்றால் இஸ்லாமின் மன்ஹஜைப் பேசுவதாகும். ஸலஃப் பின்பற்றியது இஸ்லாமைத்தான். அதாவது, நபித்தோழர்கள் எனும் ஸலஃப் அவர்களின் காலத்தில், அவர்களின் மொழியில், அவர்களில் ஒருவராக வந்த நபியவர்களைப் பின்பற்றினார்கள். இஸ்லாமைப் புரிந்து பின்பற்றினார்கள். ‘மிகத் தெளிவான பாதை’யின்மீது இருந்தார்கள். இந்த ‘தெளிவான பாதை’யைத்தான் அறபியில் ‘மன்ஹஜ்’ எனப்படும். ஸலஃபின் மன்ஹஜ் இஸ்லாமாக இருந்தது. ஆனால், அவர்களைப் போன்று நாம் இல்லையே, ஏன்? அவர்களிடமிருந்த இஸ்லாம் நம்மிடம் இல்லை. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பாதுகாப்பாக இருக்கின்ற இஸ்லாம், நம்மிடம் பாதுகாப்பாக இல்லை. மனஇச்சையான, பொய்யான, கற்பனைகள் நிறைந்த வியாக்கியானங்களால் தொடர்ந்து அதில் திரிபு வேலையைச் செய்கிறார்கள் வழிதவறிய மக்கள். எனவே, ஸலஃப் பின்பற்றியதும் நாம் பின்பற்றுவதும் பல விசயங்களில் முரண்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்தவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இஸ்லாமைச் சொல்கிறார்கள். குழப்பங்களும் பிரிவினைகளும் அதிகரிக்கின்றன. இப்போது நாம் செய்ய வேண்டியது, உண்மையான, தெளிவான இஸ்லாமை நாட வேண்டும். அது ஸலஃபின் மன்ஹஜில்தான் இருக்கின்றது என்பதையும், அதன் பண்புகள், சீர்திருத்த வழிமுறைகள் என்னென்ன என்பதையும் இந்நூல் அழுத்தமாக வழங்குகிறது.
Reviews
There are no reviews yet.