Description
‘குரங்கிலிருந்து மனிதனா?’ எனும் கேள்வி டார்வினின் ஊகத்தை எளிதாக விமர்சிப்பதற்குச் சொல்லப்படுவது. ஒன்றிலிருந்து இன்னொன்றின் பரிணாமத்தை அவர் ஓர் உயிரி தோன்றியதிலிருந்து தொடங்குகிறார். தானாக எதுவும் தோன்றாது எனும் பதிலே அவரின் மொத்த ஊகத்தையும் ஆட்டங்காணச் செய்துவிடும் என்றாலும், ஒரே ஓர் உயிரி வழியாகப் பரிணாமம் அடைந்துதான் மொத்தமும் தோன்றியது என்கிறார். இது ஒரு மூத்த மூடநம்பிக்கையாகும். குரங்கையும் மனிதனையும் மட்டுமே வைத்து அவர் ஊகிக்கவில்லை. எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கி, ஒன்றிலிருந்து இன்னொன்று என்கிறார். இதை நாத்திக நம்பிக்கையாளர்கள் ஒரு வசதியான பொய்யைப் பேச நாக்காக ஆக்கிக்கொண்டார்கள். ‘கடவுள் என்று யாருமில்லை; எதுவும் படைக்கப்பட்டதில்லை. பரிணாம வளர்ச்சியில்தான் அனைத்தும் தோன்றியுள்ளது’ என்றார்கள். ஆக, இது உண்மையில் மனிதனைப் பற்றிய விவகாரமே அல்ல. கடவுள் உண்டா, இல்லை என்ற விவகாரம். கடவுளை மறுத்து நாத்திகம் பேச, மனிதன் படைக்கப்பட்ட உண்மை வரலாறு மறுக்கப்படுகிறது. அதைத் தாங்கிப் பிடிக்க, மொத்த உயிரினங்களின் படைப்பும் மறுக்கப்படுகிறது. ஓர் உயிரி தானாகத் தோன்றியது என்பதிலிருந்து தொடங்கி கடவுளிடம் வந்து நிற்கிறது. இவ்விசயத்தில் மிகச் சுருக்கமான, எளிமையான இஸ்லாமியக் கண்ணோட்டமே இந்நூல்.
Reviews
There are no reviews yet.